Description
லத்தீன் அமெரிக்க அனுபவத்தை இருபது நாடுகளின் ஆறு நூற்றாண்டுகால வரலாற்றை, சமூகத்தில் எல்லா நிலைகளிலும் உள்ள மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் மூலமாகவும், அதைப் பற்றிய நுணுக்கமான கண்ணோட்டங்கள் மூலமாகவும் நமக்குத் தருகிறது இந்த நூல்.
போர்த்துகீசிய, ஸ்பானிய அரசுகளின் கீழ் காலனிகளாக்கபட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் உருவாக்கம்,அதன் பண்பாட்டுக் கலப்பு ,அதனூடாக உருவாகி வரும் புதிய கலாச்சாரங்கள் என மிக அருகில் இருந்து நம் சமூக வரலாற்றோடு ஒப்புநோக்கக் கூடிய அளவிற்கு நம் கண் முன் விரிகிறது இரத்தமும் நெருப்பும் கலந்த லத்தின் அமெரிக்க வரலாறு
அமெரிக்க வல்லாதிக்கம் வளர்ந்து வரும் நாடுகளை சந்தையாக மாற்றுவதற்கு செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இந்நூல் தெளிவாக உரைக்கிறது
வரலாற்று மாணவர்கள் ,சமூகவியல் மாணவர்கள் ,தமிழியல் மாணவர்கள் மானுடவியல் மாணவர்கள் மட்டுமல்லாது எல்லோருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய நூல் இந்த நூல்.