Description
அருணகிரிநாதர் 16 ஆயிரம் திருப்புகழ்ப் பாடலால் முருகவேளை அலங்கரித்தவர். திருப்புகழ் தெய்வ மணங்கமழும் அற்புதமான சந்தத்தமிழ். அவர் பாடியருளிய திருப்புகழ்ப் பாடல்கள் யாவும் இப்போது கிடைக்காவிட்டாலும், கிடைத்த பாடல்களைப் பார்த்தாலே அவர் பல தலங்களுக்குச் சென்று வழிபட்ட செய்தி விளங்கும். முருகனடியார்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும். இயல்,இசை, நாடகம் இணைந்த முத்தமிழையும் இசைத் தமிழாய் இணைத்துக் காட்டும் நூல் திருப்புகழ். -ஆர்.எஸ்.சண்முகம்.