Description
பிரேசில் நாட்டின் மிக முக்கிய நாடகவியலாளராகத் திகழ்ந்த அகஸ்தோ போல் மார்க்ஸின் சில சிந்தனைகளைப் பின்பற்றி வந்தனர். அரசுக்கு எதிராக மாணவர்களுக்கு சர்ச்சைக்குரிய பாடங்களைக் கற்பிப்பதாகக் கூறி அந்நாட்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அகஸ்தோ போல் மிகக் கொடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகினார். மேலும் அவரை பிரேசில் நாட்டிலிருந்து அர்ஜெண்டினாவிற்கு நாடு கடத்தினர். அங்கு தன்னுடைய படிப்பைத் தொடர்ந்த அகஸ்தோ போல் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தான் எதிர்கொண்ட துன்பங்கள் மற்றும் சிறையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு theatre of the Oppressed என்னும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கை நிறுவி அதை ஒரு புத்தகமாகவும் எழுதினார். அந்த புத்தகம் நடிப்பு உலகில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அகஸ்தோ போல் தன்னுடைய நடிகர்களுக்குப் பல நடிப்பு யுக்திகளைப் பயிற்சியளித்ததோடு ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாட்டையும் பயன்படுத்தி நடிகர்களைத் தயார்ப்படுத்தினார். மேலும் நடிகர்கள் எப்படி சுயமாகத் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்? என்றும் ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறுவதற்கு என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கற்பித்தார். விளையாட்டுக்களின் வழியே எப்படி ஒரு நடிகன் தன்னை கட்டுப்படுத்திக்கொள்வது என்பத்தைப் புரியவைக்க Games for actord and non actors என்ற புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தோடு சேர்த்து இணையத்திலுள்ள விளக்கங்களுடன் மொழிபெயர்த்து உருவானதே இந்நூல்.