Description
ஒரு மனிதன் கைவிடப்படும்போது இந்தப் பிரபஞ்சத்தின் நட்சத்திரங்களில் ஒன்று உதிரவேண்டும். இந்தச் சூரியனின் கிரணங்களில் ஒரு கிரணம் மறைந்து விடவேண்டும். அது அப்படி நடப்பதில்லை. சவ ஊர்வலத்தில் வழியெங்கும் உதிரும் மலர்கள் போல மனிதர்கள் எதிலிருந்தாவது உதிர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். ஏதேனும் ஒன்றிலிருந்து கருணையற்றவகையில் அவர்கள் விலக்கப்படுகிறார்கள். கைவிடப்படுதலும் கையறுநிலையும் நம் காலத்தின் ஆதார நிலையாக மாறிவிட்டன. காலங்காலமாக ஒரு காப்பியத்துயராக இருக்கும் கையறுநிலையையே இக்கவிதைகள் பேசுகின்றன.