Description
மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி – பதில் தொகுப்பாக உள்ளது.
மத்திய, மாநில அரசு பணிகளில் சேர தேர்வு எழுதுவோருக்கும் உதவும். சுலபமாக பயன்படுத்த வசதியாக மூன்று புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு தயாரித்துள்ளது.
சித்த மருத்துவம் தொடர்பான துல்லிய விபரங்கள், கேள்வி – பதில் வடிவில் உள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தில் எம்.டி., படிப்புக்கான நுழைவுத் தேர்வு, உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான தேர்வு, சித்த மருத்துவ ஆராய்ச்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, மத்திய, மாநில அரசு மருத்துவப் பணியில் சேர நுழைவுத் தேர்வு எழுதும் சித்த மருத்துவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ உலகில் முதன்முறையாக இந்த வினா – விடை பயிற்சி நுால் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராவோர், உரிய பாடப் புத்தகங்களுடன், இந்த பயிற்சி நுாலையும் பயன்படுத்தினால், வெற்றி இலக்கை சுலபமாக அடையலாம். வி பி பி கிடையாது (Cash & Delivery Not Available