விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்


Author: அரவிந்த் சுவாமிநாதன்

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 550.00

Description

தமிழின் நவீனச் சிறுகதை என்று ஆய்வாளர்களால் மதிப்பிடப்படும் 'குளத்தங்கரை அரசமரம்', 1915-இல், 'விவேகபோதினியின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் இதழ்களில் வெளியானது. ஆனால், அதற்கு முன்பே திருமணம் செல்வகேசவராய முதலியார், பாரதியார் போன்றோரது சிறுகதைகள் வெளியாகிவிட்டன.

ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்பே, 1892 முதல் வெளியான 'விவேக சிந்தமாணி' மாத இதழில், பல சிறுகதைகள் மாதந்தோறும் வெளியாகியிருக்கின்றன.. நீதிபோதனைகளாகவும், சம்பவ விவரிப்புகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் இருந்த அவற்றை, சிறுகதைகளுக்கான ஆரம்ப முயற்சிகள் என்று மதிப்பிடலாம்.

கடந்த நூற்றாண்டுகளில் துவங்கிய இச்சிறுகதை மரபு வளர்ந்து, ஒரு பக்கக் கதைகள், அரைப்பக்கக் கதைகள் ஆகி, இன்றைக்கு 'ட்விட்டர் கதைகள்' ஆகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது அதன் வீரியமிக்க பாய்ச்சலை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் தலைமுறையில் பலரும் அறிந்திராத, படித்திராத அரிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை, கடந்து போன நூற்றாண்டை நம் கண்முன் பிரதிபலிக்கின்றன. அந்தக் காலத்து மனிதர்கள், அவர்களது வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், சமூகப் பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுமொரு வாயிலாக இச்சிறுகதைத் தொகுப்பைக் கருதலாம்.

You may also like

Recently viewed