Description
ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை? யார் ஏற்றுகிறார்கள்? கச்சா எண்ணெயின் விலையைத் தீர்மானிப்பது யார்? பெட்ரோலியக் கச்சா எண்ணெய் எந்தெந்தத் துறைகளில், என்னென்ன விதங்களில் உபயோகமாகிறது என்பது தெரிந்தால் இதன் பின்னால் நடைபெறும் அரசியல் முழுவதுமாகப் புரியும். பெட்ரோலியப் பொருளாதாரத்தின், அதனை ஆளும் அரசியலின் அடி ஆழம் வரை ஊடுருவிப் புரிந்துகொள்ள உதவுகிறது இந்நூல். தமிழில் இத்துறை சார்ந்து இன்னொரு நூல் இதுவரை வந்ததில்லை.