Description
இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் எல்லாம் பேரண்ட வெடிப்பு உருவாகிறது. பா. ராகவனின் ‘இறவான்', மிக நுணுக்கமான, முள் நேர்த்தியுடன் கூடிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு பெருங் கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை இதைவிடச் சிறப்பாக வேறெந்த நாவலும் படம் பிடித்ததில்லை.