Description
கரிசல் இலக்கிய படைப்பாளர் கி.ரா.வின் தொன்னூற்றெட்டு வயதில் படைத்தளித்த எழுத்துகள் இவை. அவருடைய வாழ்வின் அனுபவமும் அவருக்கே உரித்தான எள்ளலும் இரண்டறக் கலந்து சமைத்த அமுதம் என இவற்றைக் கொண்டாடலாம். கி.ராவின் வாசகர்களுக்கு எதிர்பாராமல் கிடைத்த புதையல் என்பதாகவும் இந்நூலை கூறலாம். மனித உள்ளங்களின் மகா வித்தைகளையும் விந்தைகளையும் தம் மொழியில் விரித்துக் கொண்டே செல்கிறார் கி.ரா
தமது மண்ணில் தாம் அறிந்த எளிய மனிதர்களில் தொடங்கி ரசிகமணி டி.கே.சி. போன்ற அபூர்வ மனிதர்கள் வரைக்கும் தன் எழுத்தால் வரைந்து கொண்டே செல்கிறார். ஒவ்வொரு வாசகனின் புத்தக அலமாரியிலும் இருக்க வேண்டிய அபூர்வ நூல் இது.
- தினமணி