Description
துப்பறியும் கதை என்றாலே ‘ஷெர்லக் ஹோம்ஸ்’ தான் நமக்கு நினைவுக்கு வரும். இந்தக் கதாபாத்திரம் அறிமுகமான நாவல்தான் A Study in Scarlet என்ற சர் ஆர்தர் இக்னேஷியஸ் கோனான்டைல் எழுதிய நாவல். அதுவே அவரது முதல் துப்பறியும் கதை. இந்த நாவலுக்கு அவர் வைத்த முதல் பெயர் A Tangled Skein’. இந்த நாவல் முதலில் ‘பீட்டன்ஸ் கிறிஸ்மஸ் ஆண்டு இதழ்’ என்ற இதழிலும் பிறகு 1888இல் நூலாகவும் வெளிவந்தது. துப்பறியும் நாவலில் பூதக்கண்ணாடி இடம்பெற்றதும் இந்த நாவலில் தான். இந்த நாவலே ‘சிக்கலான நூற்கண்டு’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சந்தியா பதிப்பகம் மூலம் வெளிவருகிறது.