Description
எவ்விதமான எளிய குறிப்புகளுக்குள்ளும் மதிப்புரைக்குள்ளாகவும் சுருக்கிவிட இயலாத மனித வாழ்வைப் பேசுபவை ஷோபாசக்தியின் சிறுகதைகள்.
காலம், நவீன மனமும் கலைத்தன்மையும் கொண்ட கதாசிரியனை தேர்வு செய்து கொண்டு அவன் மூலமாக மனிதப் பாடுகளாகிய போர் துரத்திய வாழ்வை, அரசியல் பண்பாட்டுச் சிதைவுகளை, அது ஏற்படுத்திய உளவியற் சிக்கல்களை கதைகளாக்கி உலக வெளிக்கு கொண்டு வருகிறது. அதற்கான அருகாமையின் மொழியும் கலையாக்க நுணுக்கமும் மிகுந்த கதை சொல்லியான ஷோபாசக்தியின் தேடல்களில் இருப்பதை இத்தொகுப்பிலுள்ள இச்சிறுகதைகள் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.