Description
ஒரு பத்துக் கதாபாத்திரங்களும் ரஷ்ய சிறப்பு முகாமின் ஒருநாள் அனுபவங்களும்தான் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் நாவலின் கதை. ஸ்டாலின் காலகட்ட அடக்குமுறை அவரது காலகட்டத்திலேயே பதிவானது, ரஷ்ய இலக்கிய வரலாற்றில் வேறந்த நாவலிலும் கிடையாது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களால் சிறைபிடிக்கப்படும் நாயகன், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பிவந்துவிடுகிறான். ரஷ்ய ராணுவமோ அவனை நம்பமறுக்கிறது. உளவாளி என முத்திரை குத்தி சிறையில் அடைத்துவிடுகிறது.
சிறப்பு முகாமின் ஒரு நாளை விவரிப்பதன் மூலம், அங்கு நடக்கும் ஊழல்கள், சிறைவாழ்வின் பரிதாபங்கள், அடக்குமுறைகள் என அனைத்தையுமே காட்சிப்படுத்திவிடுகிறார் அலெக்ஸாண்டர் ஜோல்செனிட்சின்.