நாடகமும் தமிழிசையும்


Author: டி.கே.எஸ். கலைவாணன்

Pages: 176

Year: NA

Price:
Sale priceRs. 150.00

Description

நாடகமும், இசையும் ஒரு காலகட்டம் வரை மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. இன்று கடந்த காலங்களில் இவை எப்படியெல்லாம் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதை எடுத்துக் கூறும் நுால்.
இதில், 20 கட்டுரைகள் வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்டவை. நாடக ஆக்கத்திற்குத் தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய இரு கட்டுரைகள் அவரைப் பற்றியும், அவரது நாடக ஆக்கம் உருவான விதத்தையும் விரிவாகக் குறிப்பிடுகிறது. அவரே நடிகராய் இருந்து மக்களிடம் பெற்ற செல்வாக்கையும். அபார நடிப்புத் திறனையும், சொல் சாதுர்யத்தையும் விளக்குகிறார்.
நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் எழுதி, நடித்த நாடகங்களையும் சுவைபட விளக்குகிறது. நாடகம் வளர்த்த நால்வர் என்ற கட்டுரையில் டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகியோர் நாடகக் கலைக்குப் பெருமை சேர்த்த விதத்தை ஆராய்கிறது.
தமிழ் நாடகம் பற்றியும், தமிழிசை பற்றியும் அறிந்து கொள்வதற்குரிய வரலாற்றுத் தகவல் பொதிந்துள்ள நுால்.
ராம.குருநாதன்

You may also like

Recently viewed