Description
சாவர்க்கரின் வாக்குமூலம்' நூல் மூலம், சாவர்க்கர் எத்தனை உறுதியுடன் தன் மீதான வழக்கை எதிர்கொண்டார் என்பது புரியும். தான் குற்றம் இழைக்கவில்லை என்பதை சாவர்க்கர் அடுக்கடுக்கான ஆதாரங்களுடனும் அசைக்கமுடியாத வாதங்களுடனும் முன்வைக்கிறார். ‘ஒருவேளை ப்ராஸிக்யூஷன் தரப்பு சொல்வது உண்மை என்று வைத்துக்கொண்டால்’ என உண்மைக்குப் புறம்பான ஒரு யூகத்தை ஒப்புக்கொண்டு, அந்த யூகம் எத்தனை தூரம் அபத்தமானது என்பதையும் ஆதாரத்துடன் முறியடிக்கிறார் சாவர்க்கர்.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர் குற்றமற்றவர் என்பதை இந்த நூல் விளக்குவதோடு, சாவர்க்கரின் நுட்பமான அறிவையும் வாதத் திறமையையும் பறைசாற்றுகிறது.