Description
ஜெயலலிதா பிறந்தது முதல், மறைந்தது வரை வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் புத்தகம்.
மைசூரில் தாய்வழி தாத்தாக்களின் இல்ல பெயர்களில் ஒன்று ஜெய விலாஸ்; மற்றொன்று லலிதா விலாஸ். இவற்றின் முன்னொட்டுகளே, ஜெயலலிதா என அமைந்ததாக ஒரு சுவையான தகவலும் உள்ளது.
வெண்ணிற ஆடை அவர் நடித்த படம். அதற்கு தணிக்கை துறை, ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருந்தது. ஜெயலலிதாவுக்கு, 18 வயது நிறையாததால் அந்த படத்தை திரையரங்கம் சென்று பார்க்க முடியவில்லை என்ற தகவலும் உள்ளது.
அ.தி.மு.க., தொண்டர்களால், ‘அம்மா’ என போற்றப்பட்டவரின் வாழ்க்கைச் சரித்திரம்.
– சீத்தலைச்சாத்தன்