Description
வி.ச.வாசுதேவன் பாரதியின் எழுத்துகளால் ஆவேசமுற்று அடிமையாகி பாரதிப் பணியில் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற தமிழர்களில் ஒருவர் வி.ச.வாசுதேவன். ‘மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்’ என்ற ஒப்புமை நூல் ஒன்றை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது ‘பாரதி உள்ளம்’ என்ற நூல் முதற்பதிப்பாக 1977இல் வெளிவந்தது. இந்நூலின் இரண்டாம் பதிப்பை (2018) சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தற்போது வெளிவரும் ‘மகாகவி பாரதியார் போற்றும்
ஸ்ரீ ஆண்டாள்’ என்ற நூல் வி.ச. வாசுதேவனின் பாரதி அர்ப்பணிப்பில் விளைந்த இன்னும் ஓர் நல்முத்து.