கலைஞர் என்னும் மனிதர்


Author: மணா

Pages: 352

Year: NA

Price:
Sale priceRs. 500.00

Description

திராவிட இயக்கத்தின் முக்கியமான ஆளுமையாக, திமுக தலைவராக, மாநில முதல்வராக, திரைத்துறையில் சிறந்த வசனகர்த்தாவாக அறியப்படும் மு.கருணாநிதி, ஒரு மனிதராக எதிர்கொண்ட சவால்களையும், ஓயாத உழைப்பையும் பல்வேறு கட்டுரைகள், பேட்டிகள் மூலம் இந்நூல் விளக்குகிறது .
சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக புரட்சி பேசி, தமிழ்த் திரைப்படங்களின் திசையை மாற்றிய "பராசக்தி' படம் குறித்து அனைவருக்கும் தெரியும் என்றாலும், 1952-ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகும் முன்னர் சந்தித்த பிரச்னைகள், தடைகள், பராசக்திக்கு முன்னும் பின்னும் சிவாஜியின் வாழ்க்கை எவ்வாறாக அமைந்தது என்பது பற்றிய கட்டுரை சுவாரசியமானது.
'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்புக்காக எம்ஜிஆர் வெளிநாடு சென்றபோது, அவரை வழியனுப்ப அப்போது முதல்வராக இருந்த தான் சென்றதையும், அதுகுறித்து ஓர் இதழில் எம்ஜிஆர் நெகிழ்ச்சியாகப் பதிவு செய்ததையும் 1990-இல் வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் உருக்கமாகக் குறிப்பிடுகிறார் கருணாநிதி.

கிரிக்கெட்டின் நுட்பங்களை அரசியல் ரீதியான அணுகுமுறைகளுடன் ஒப்பிட்டு, தனக்கு ஏன் கிரிக்கெட் பிடிக்கிறது என கருணாநிதி தெரிவித்த தகவல், கிரிக்கெட்டை போலவே அனைவரையும் கவரும்.

வைணவ மகான் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைத் தொடரை நாத்திகவாதியான தான் எழுதியது ஏன் என்பது குறித்த ஒரு பேட்டியில், "கொண்ட கொள்கை உறுதி வேறு; பிறரிடம் உள்ள நல்ல கொள்கைகளைப் போற்றுவது என்பது வேறு' எனக் குறிப்பிடுகிறார் கருணாநிதி.

கருணாநிதியுடன் பழகிய அனுபவங்கள் குறித்து பிரபலங்கள் எழுதிய கட்டுரைகளில், அவர்களுடைய தனிப்பட்ட நட்பு தொடர்பான தகவல்கள் மட்டுமின்றி, அக்கால சமூக, அரசியல் நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டுரைகளுக்குப் பொருத்தமான புகைப்படங்கள் நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

You may also like

Recently viewed