Description
பெண்கள் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண் கல்வி எனப் பேசிய நிலையைக் கடந்து சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குப் பெண்கள் வீதியில் இறங்கிக் குரல் கொடுக்கும் ஆரோக்கியமான நிலையை இன்று காண்கின்றோம். பெண்கள் அரசியல் பேசுவதும் இலக்கியம் பேசுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என நாம் சொல்லி வருகிறோம். பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் ஒளவையார் பேசிய அரசியலும் இலக்கியமும் ஏனோ நம் நினைவுக்கு வரத் தாமதமாகிறது. அதன் பின்னரும் நிறையப் பெண்கள் பேசினார்கள். எழுதினார்கள். ஆனால் நாம்தான் அதனை மறந்து போனோம். அதனை நினைவூட்டுகிறது ப.திருமலையின் “பெண்ணே பேராற்றல்” என்ற இந்த நூல்.

