Description
இந்திய சினிமாவின் தோற்றக் காலத்திலிருந்தே, தொழிலிலும் பட உருவாக்கத்திலும், முஸ்லிம்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க அளவில் இருந்திருக்கிறது. இந்த இரண்டு பரிமாணங்கள் பற்றி எழுதுவதுடன் சில படங்களின் உள்ளடக்கத்தையும் இந்த நூலில் ஆசிரியர் அப்சல் பரிசீலிக்கிறார். அண்மையில் வந்த சில படங்களின் அரசியலைப் பற்றியும் பேசுகிறார். ஆசிரியரின் கவனம் இந்தி, தமிழ், மலையாளம் சினிமாக்களின் மேல் பதிகிறது.