Description
தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான தி.ஜானகிராமன் (28.2.1921 -18.11. 1982) எழுதிய சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு. அவரது சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு 1979ஆம் ஆண்டு சாகித்திய நூற்றாண்டையொட்டி வெளியாகிறது. அவரது பல நாவல்களுக்காக வாசகர்களால் கொண்டாடப்படும் தி.ஜானகிராமன் மிகச் சிறுகதைகளையும் எழுதியவர். அவரது சக்தி வைத்தியம் என்ற அகாதெமி விருது அளிக்கப்பட்டது. பயணக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ள தி.ஜா இசைப் பயிற்சியும் ஞானமும் கொண்டவர். இங்கு தொகுக்கப்பட்டுள்ள கதைகள் தி.ஜா. வின் படைப்பாற்றலையும் அவரது பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்துபவை. வாசகர்களுக்கு ஒரு சிறந்த வாசக அனுபவத்தையும் ஆய்வாளர்களுக்கு அவரது இலக்கியக் கொள்கை என்ன என்பதை விளங்கிக் கொள்ளவும் உதவக் கூடிய கதைகள். இவை அவரைப் பற்றி பரவலாக கட்டமைக்கப்பட்டுள்ள பார்வைகளை மாற்றவும் கூடும். இந்த நூலின் தொகுப்பாசிரியர் மாலன், இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா பரிஷத் விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர். சிங்கப்பூர் வழங்கும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் ஒரே தமிழரும் இவரே. 2019ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று தமிழக அரசால் விருதளித்து கௌரவிக்கப்பட்டவர். சாகித்திய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினர்.