Description
இந்தியாவின் இளம் அரசியல் தலைவர் ராஜிவ் கொலை பின்னணியில், பல உறுத்தலான காட்சிகள் ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளன. புலனாய்வு இதழியல் என்ற தன்மையில் சாதாரண பொதுமக்களுக்கு, ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய அனைத்து வகை தகவல்களையும் வழங்கியுள்ளது. ஒவ்வொரு குறிப்புகளும், படங்களும், தேதி மற்றும் நேரம் வாரியாக மிகவும் துல்லியமாக அச்சேற்றியுள்ளனர்.
இதை முழுமையாகப் படித்து முடித்தால், ராஜிவ் படுகொலைக்கான காரணமாகப் பலதரப்பட்ட பிரச்னைகள் புதிய கண்ணோட்டங்களாக விரியும். இந்திய மக்களுக்குப் பல உண்மைகள் இன்னமும் தெரியவில்லை; தெரியாமல் இருப்பதால் தான் பலதரப்பட்ட கருத்துகள் தோன்றுகின்றன. இந்த நுால், ராஜிவ் படுகொலைக்கான தரவுக் களஞ்சியம் என்ற நிலையில் வரவேற்கலாம்.