Description
இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் புத்தகம் என உரிமை கோருகிறது. தேவதாசி முறையின் துவக்கம் முதல் தேவதாசி ஒழிப்பு சட்டம் வரை இந்த நூலில் பேசப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் குறித்து பேசிய முனைவர் எஸ்.சாந்தினிபீ ,”தேவதாசிகளே சட்டப்படி ஒழிக்கப்பட்டனர். இவர்களின் வாழ்க்கை சீர்பெறவே தந்தை பெரியாரும் முயற்சித்தார். இதற்கு முன்னர் வந்த பெரும்பாலான புத்தகங்கள் இவர்களைப் பற்றியே சொல்வதாக அறிகிறேன். மக்கள் அறிந்ததும் அவர்களைப் பற்றியே. இதனால்தான் வைரமுத்து ஆண்டாள் குறித்து சொன்னதை நம்மில் சிலர் ஏற்க மறுத்தனர். சரியான புரிதல் இருந்திருந்தால் வைரமுத்துவும் ஆண்டாளை தேவதாசி எனக் குறிப்பிடாமல் ‘தேவரடியார்’ என்று சொல்லியிருப்பார், எவரும் மறுத்திருக்கமாட்டார்கள். தேவதாசி முறை குறித்தே இந்த முழு புத்தகமும் பேசும்” என தெரிவித்துள்ளார்.