Description
“உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது” என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
“என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு’ எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.