Description
இதுவரை படைப்பிலக்கியத்தின் சின்னமாக முன்வைக்கப்படும், 'மணிக்கொடி'யின் சினிமா முகத்தை முதன்முறையாக மிக விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது இந்நூல். அதற்கான மூலப் பிரதிகளைத் தேடித் தொகுத்துத் தக்க சான்றுகளுடன் நேர்த்தி மிகும் நடையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் கெட்டிதட்டிப்போன வழமையான கருத்தாக்கம் மீது கல் எறிகிறது. தமிழ்ப் பண்பாடு குறித்த தடங்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் கடற்கரய் மத்தவிலாச அங்கதத்தின் ஆறாம் ஆய்வுநூல் மணிக்கொடி சினிமா.