Description
கழிவறை இருக்கை
இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார்.
திருமணத்தில் வெற்றி பெற்றவர்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதையும் திருமண உறவில் தோல்வி அடைந்தவர்கள் ஏன் தோல்வி அடைந்தீர் என்பதையும் வெளிப்படையாக பேசுங்கள் என்கிறார். இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் அதற்கான ஊக்கம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையில் பெற்றோர்களின் பங்கு என்ற ஒரு கட்டுரைக்காகவே இந்த புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கலாம்.
பெண்கள் பேசத் தயங்குகிற விஷயத்தை ஒரு பெண் பேசி இருக்கிறார் அதனால் ஆண்கள் அவசியம் படிக்க வேண்டும்.
பெண்களிடம் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் பேசி இருக்கிறார் எனவே பெண்களும் அவசியம் படிக்க வேண்டும்.
மந்தை மாந்தர்கள்
தனிமனிதத் தேர்வுகளும், சமூக இலக்கணங்களும் எந்நேரமும் போரிட்டுக்கொண்டே இருக்கின்றன! சமூக நிந்தனைக்கு பயந்தும், இல்லை இந்தக் கூட்டம் தன்னை ஒதுக்கி தனியாக நிற்க வைத்துவிடுமோ என்ற அச்சத்திலும் பெரும்பான்மையான தனிமனிதர்கள் இந்தப் போரில் காலங்காலமாகத் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். சமூகம் என்ற சொல்லே தனிமனிதர்களின் கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்கையில் தனிமனிதர்கள் தோல்வியுறும் போரில் சமூகம் எப்படி வெற்றி காண இயலும்? ஒவ்வொரு தனிமனிதரும் தனக்குள்ளேயே பிளவுபட்டுக் கிடக்கையில் சமூக ஒற்றுமை என்பது கானல் நீரே! இதைப்பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும் தேவை இருக்கிறது. அதனால்தான் இந்தப் புத்தகம் எழுத வேண்டிய ஒரு கட்டாயம் எனக்குள் உந்துதலாக ஏற்பட்டது.
வாழ்கை வாழ்வதற்கே இல்லையா?
அன்பும் நன்றியும்.
~லதா