Description
சமகால வாழ்விலிருந்து தொடங்கி பின் நோக்கியும் முன் நோக்கியும் பயணிக்கும் இப்புதினம் 'பதூவன்' எனக் கூறப்படும் அரபு மூலக்குடிகளின் வாழ்வியல், புலம் பெயர்ந்த இந்தியர்களின் தினசரி, கவிதை, வன்மம், காமம், பின்- பின் நவீனத்துவ தத்துவம், ஆதி மனித வேட்கை, பாலைவனம்,'ஜின்' எனும் மாய வலை, இயற்கை என்று பல எல்லைகளைக் கொண்ட ஒரு எல்லையற்ற புனைவு. தமிழுக்கு மட்டுமல்லாமல் இந்தியா இலக்கியத்திற்கே புதிய கதைக்களத்தை அறிமுகப் படுத்தியிருக்கும் இந்த 'அல் கொஸாமா' வாசகர்களின் கண்களில் முடிவற்ற நிலப்பரப்பை ஸ்ருஷ்டிக்கும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை.