Author: நாராயணி கண்ணகி

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 310.00 Regular priceRs. 320.00

Description

சரித்திரம் என்பது எழுதுவதல்ல, நிகழ்வது. நிகழ்ந்த சரித்திரங்கள் அத்தனையும் எழுதப்படவில்லையென்பதே மண்ணிற்குள் கரைந்தூறியிருக்கும் குருதியின் மௌமான ரௌத்திர தீயொலியாகும். வடார்க்காட்டு மண்ணில் விழும் வெயிலே அடிமை மக்களின் கந்தகக் கோபங்களுக்கு சாட்சி. இந்த மண்ணில் முளைத்த சிப்பாய்ப் புரட்சி மூக்குவரை மறைக்கப்பட்டன. எழுபதுகளில் உருவான ஆயுதப்புரட்சி அடிவயிற்றிலிருந்தே கருக்கலைப்பு செய்யப்பட்டது. மண்ணையும், விளையும் செல்வங்களையும் தானே அனுபவித்து மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் காமக்கனிகளையும் சுவைத்து சுகம் போகித்திருந்த ஆண்டைகளை எதிர்த்து அடிமைகளின் குரல் சிவப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகி விடுகிறது. வீரம் முளைத்து நான்கு அடிமைகள் கைக் கோர்க்கும்போதே நூறு உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. ஆயிரம் கைகள் வெட்டப்படுகின்றன. அதற்கு இந்தp புதினம் முதல் சாட்சி.

You may also like

Recently viewed