Description
ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன. மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும்./