Description
ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய, வர்ணிக்க முடியாத அழகுள்ள வைரக்கற்களை நம் முன் பரப்பி வைத்துப் பார்த்து ரசிப்பது ஆனந்தம். அந்த வைரங்களை ஒரு தங்கச் சங்கிலியில் வரிசையாகப் பதித்து ஒரு அட்டிகையாக்கி அழகு பார்ப்பது இன்னும் பெரிய ஆனந்தம். அந்த அட்டிகையை உங்கள் கழுத்தில் அணிந்துகொண்டால் பரமானந்தம். உங்களைப் பார்ப்பவர்களுக்கும் அந்தப் பரமானந்தம் தொற்றிக்கொள்ளும். நம்மாழ்வார் இறைவன்மேல் உருகி உருகிப் பாடிய பாசுரங்கள்தான் அந்த வைரங்கள். பச்சைப் புடவைக்காரி எனக்கு வரமாகக் கொடுத்த எழுத்துதான் அந்தத் தங்கச் சங்கிலி. இந்த வைர அட்டிகையை இறைவனின் அடியவர்களாகிய நீங்கள் அணிந்துகொண்டு பரமானந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதுதான் இந்த நூல்.