ஜீவன் லீலா


Author: தமிழில்-பி.எம்.கிருஷ்ணசாமி

Pages: 477

Year: 2022

Price:
Sale priceRs. 520.00

Description

காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண அனுபவங்களை அழகிய சொற்சித்திரங்களாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் எல்லா முக்கிய நதி தீரங்களையும், அருவிகளையும், கடலோரங்களையும் இதில் காண்கிறோம்.

இயற்கையின் எழிலிலே, குறிப்பாக நீரோரத்திலே - மறக்கமுடியாத அனுபவங்களை நுட்பமாக வரைந்துள்ளார் ஆசிரியர். வரலாற்றின் நினைவுகளும், புராண இதிகாசங்களின் நிழல்களும், இலக்கிய அணிகளும் இவரது எழுத்திலே தெரிகின்றன. நதிகளை “பிரபஞ்சத்தின் தாய்மார்” என்கிறது மகாபாரதம். இந்நூலில் அத்தாய்மாரின் சீராட்டைக் கவியழகுடன் கூடிய கட்டுரைகளிலே வரைந்துள்ளார் ஆசிரியர்.

முதன்முதலில் குஜராத்தியில் வெளியான இந்த நூலை, பிறமொழிகளிலும் மொழிபெயர்க்க ஏற்றதாகச் சாகித்திய அகாதெமி தேர்ந்தெடுத்தது. வங்கம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இந்த நூல் வெளிவந்துள்ளது. 1971-இல் முதல் பதிப்பாகவும், 1986-இல் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்த இந்நூல் தற்போது மீண்டும் மறுபதிப்பாக வெளிவருகிறது.

You may also like

Recently viewed