Description
"மனிதனுக்கான ஆதி சாலைகளை முதலில் உருவாக்கித் தந்தவை விலங்குகளின் குளம்படிகள்தான்"
-பராரிகள்
ஆசிரியரைப் பற்றி நரன் (1981)
விருதுநகரில் பிறந்தவர். "361 டிகிரி" என்ற சிற்றிதழைத் துவங்கி அதன் ஆசிரியராக
செயல்பட்டார். 2002 - லிருந்து சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். உப்புநீர் முதலை (2010). ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் (2014). லாகிரி
(2016), மிளகு, பருத்தி மற்றும் யானைகள் (2020) ஆகிய கவிதை தொகுப்புகளும், கேசம் (2017) சரீரம் (2019) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன . இந்த இரண்டு தொகுப்புகளும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "சால்ட்" என்ற பதிப்பகமும் நடத்தி வருகிறார் சென்னையில் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.