Description
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதி நல்லுத்தேவன் பட்டியில் பிறந்தவர். நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கல்லூரியில் புகுமுக வகுப்பு, மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பி.லிட்., பட்ட வகுப்பு, மதுரை யாதவர் கல்லூரியில் எம்.ஏ., பட்ட மேற்படிப்பு முடித்தவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.பில்., ஆய்வு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு என இள முனைவர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.
திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், நிலக்கோட்டைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எனப் பதவிகள் வகித்தவர். இவர் மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி மற்றும் உசிலம்பட்டித் தேவர் கல்லுரித் தமிழ்த்துறைகளில் பணி யாற்றியவர். 'சத்தியக்கோடு' எனும் கவிதை நாடகத்தையும், 'ஒரு தொண்டனின் கழக நினைவுகள்' எனும் கவிதைத் தொகுதியையும் ஆக்கியளித்தவர். இந்நூலில் பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி பற்றிய புனைவு கதையாக விரிகிறது, இனம் கடந்த உறவு வளர்கிறது.