Description
தங்களது அரசியல் நிலைப்பாட்டுக்காக,
சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டார்
என்று சொல்லும் ஒவ்வொரு மனசாட்சியற்ற
இந்தியனும் படிக்க வேண்டிய நூல் இது.
சாவர்க்கர் அந்தமான் சிறையில் குளிரூட்டப்பட்ட
அறையில் ஓய்வெடுத்துப் பொழுதைக் கழித்துக்
கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு நொடியும்
சொல்லொணாத் துன்பங்களுக்கு இடையே
உழன்று கொண்டிருந்தார். ஒரு பக்கம்
குடும்பத்தின் நினைவு, இன்னொரு பக்கம்
அலுப்பைத் தரும் தண்டனைகள், ஆனால்
பாரத தேசம் மீதான அவரது தேசப்பற்று
இம்மியளவுகூடக் குறையவே இல்லை; மாறாக
அதிகமாகிக்கொண்டே போனது.
அந்தமான் சிறையில் அரசியல் கைதியான
சாவர்க்கருக்கு வருடத்துக்கு ஒரு தடவை
மட்டுமே தன் குடும்பத்துக்குக் கடிதம் எழுதும்
அனுமதி தரப்பட்டிருந்தது. அப்படி அவர் எழுதிய
கடிதங்களின் தொகுப்பு இது.
படிப்பவர் கண்களில் கண்ணீரைக் கொண்டு
வரும் கடிதங்கள் இவை.