Description
அந்தக் காலப் பக்கங்கள்' நூலின் முதல் பாகம் பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகமாக இந்நூல் வெளியாகிறது.
அந்தக் காலத்துத் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. எங்கு தேடினாலும் கிடைக்காது தகவல்களை, மிகவும் சுவாரசியமான நடையில் எளிமையாகத் தருகிறார் அரவிந்த் சுவாமிநாதன் இத்தனை தகவல்களை இவர் எப்படிச் சேகரித்து
வைத்திருக்கிறார், அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல எப்படி இவருக்கு மட்டும் இத்தனை தகவல்கள் கிடைக்கின்றன என்ற மலைப்பை ஏற்படுத்தும் நூல் இது.