நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும்


Author: எ.சி.காமராஜ்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 230.00

Description

மத்திய அரசின் தேசிய நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினராக இருக்கும் ஏ.சி.காமராஜ், மாநிலங்களுக்கிடையிலான முரண்பாடுகளால் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வராத சூழலில், அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ‘கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலைத் திட்டம்’ என்னும் அதிநவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை முன்மொழிந்தார். அந்தத் திட்டம் மற்றும் அதைச் செயல்படுத்தத் தான் எடுத்த முயற்சிகளை இந்த நூலில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.

கங்கையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழிப்பாதை ஏற்படுத்த முன்னோடித் திட்டமாக உருவாக்க எடுத்த உழைப்பை எடுத்துரைக்கும் நுால். முயற்சிக்கு இடையே சந்தித்த அரசியல் தலைவர்கள் பற்றியும், அவர்களது நேர்மைத் திறம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.
காமராஜர், ராமகிருஷ்ண ஹெக்டே, அப்துல் கலாம், தமிழக முதல்வர்கள் என்று பலருடன் கொண்டிருந்த தொடர்புகளையும், அவர்களிடம் எடுத்துரைத்த தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான திட்டங்களையும் எளிய தமிழில் எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவில் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக்கி உள்ளார். அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் உள்ளது உள்ளபடி தெரிவித்துள்ளார். நாட்டு வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்ல நுால்.

You may also like

Recently viewed