மதுரை வரலாறு: 1736-1801


Author: கே. ராஜய்யன்

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 450.00

Description

மதுரையின் மரபுசார் அதிகாரம் முடிவுக்கு வந்த 1736 - 1801 ஆண்டுகளில், ஐரோப்பியர்களின் வல்லாதிக்ககாலம் தொடங்குவதை பேரா.கே.ராஜய்யன் கடும் உழைப்பில் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

பொருள்சார் சிந்தனை பெற்ற ஐரோப்பிய வல்லாதிக்க சூழ்ச்சி பெற்றவர்களின் முன் இந்து மற்றும் இசுலாமிய அதிகாரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல், தக்க வைக்க முடியாமல் சோர்ந்துபோன வரலாற்றை துயர் மொழியில் பதிவு செய்துள்ளார்.

அரியணைக்கு அப்பால் தம் கட்டுப்பாட்டினை விரிவு படுத்தக்கூடியவர்களாக நாயக்கர்களோ, நவாப்பின் ஆட்சியாளர்களோ இல்லை என்பது ஐரோப்பிய குடியேற்றவாதிகளுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.

ஆட்சியாளர்களால் கைவிடப்பட்ட பாளையக் காரர்களின் போராட்டத்தையும் தன்னாட்சி நடத்தி வந்த கள்ளர்களையும் ஐரோப்பியர் வரிவசூலுக்காக படுகொலை செய்த பெருங்கொடுமை வரலாற்றின் பக்கங்களில் நீங்கா வடுவாக நீடித்துள்ளது.

You may also like

Recently viewed