Description
உலகம் முழுவதும் வியாபித்திருக்கும்
என் தமிழ் இனமே.....
கஸ்தூரிராஜா என்கிற கிருஷ்ணமூர்த்தி யாகிய நான்
என்னை மீண்டும் அறிமுகம் செய்து கொள்கிறேன்.
நான்...
தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் அருகே
மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்திலே
மல்லிங்காபுரம் என்னும் புழுதிக்கிராமத்திலே
பிறவிப்பயன் பெற்று உருவானவன்.
பள்ளி நாட்களிலும், கல்லூரி காலங்களிலும்
தமிழ் எழுதும் கனவுகளால் களவாடப்பட்டு
1977-78ம் ஆண்டுகளில்
தலைநகர் சென்னை வந்து புகுந்தேன்.
எழுத்துத்துறையில் அங்கீகாரம் கிட்டாமல் போனாலும்
திரைப்படத்துறையில் எனக்கு அடையாளம் கொடுத்தது
என் தமிழ் இனம்.
என் மனைவி திருமதி. விஜயலட்சுமியும்
ஒரு தயாரிப்பாளரே.
இயக்குநர் செல்வராகவன்
நடிகர் தனுஷ்
ஆகிய இருவரும் என் மகன்களாவர்.
டாக்டர். விமலகீதா
டாக்டர். கார்த்திகாதேவி
ஆகிய இருவரும் என் மகள்களாவர்.
வள்ளல் தன்மையுடன்
எனக்கு இத்தனை விலாசங்களைக் கொடுத்த
என் தமிழ் இனமே
எனது இலக்கியவாதி" என்கிற முகவரியையும்
அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன்
பாமர இலக்கியம் என்னும்
இத் தமிழ்ப் பண்பாட்டு இலக்கியத்தை
உங்கள் வாசிப்புக்கு சமர்ப்பிக்கிறேன்.
நன்றியும்... வணக்கமும்....