Description
மனித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்களின் வலிகளையும் வேதனைகளையும் அவர்களுடனேயே தங்கியிருந்து இரத்தமும் சதையுமாகத் தன் நாவலில் மஹாஸ்வேதா தேவி பதிவு செய்திருக்கிறார். இலத்தீன் அமெரிக்க எழுத்துகளைத் தமிழுக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் அமரந்த்தா அவர்களின் செம்மையான மொழிபெயரப்பில் உருவாகியுள்ள தொகுப்பு இந்நூல்