Description
பல்பொருள் அங்காடியின் சீர்மிகுந்த அடுக்குகளில் வரிசையாகக் காணக் கிடைக்கிற லட்சோப லட்சம் மாதிரிகளில் ஒன்று அல்லவே அல்ல, மாறாகக் கவிதை யாரும் நுழைந்து பாராத வன இருளின் நடுவாந்திர ஆழத்தில் வீற்றிருக்கும் பேரற்ற உப தெய்வத்தின் உதட்டோரம் தொக்கிக் கிடக்கும் மர்மம் பொங்குகிற குறும்புன்னகையினைப் போன்றதொரு ஒற்றை.
ரிஷான், தன் கவிதைகளினூடாகக் கட்டமைக்கிற உலகமானது உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் ஊடாடுகிற அந்தரத்தின் இல்லா இருளினுள் வாசிப்பவனை எறிந்தபடி விரியத் தொடங்குகிறது. நுழைவதற்கும் மீள்வதற்கும் இடையில் ஒன்றாக உடைந்து இன்னொன்றாகத் திரும்புகிற மாயத்தின் உட்புற நோக்கெனக் கசியும் வினோத இருப்புமாற்றத்தை உருவாக்குகிற கவிதைகள் இவை.
- ஆத்மார்த்தி