புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு


Author: ஆ.பத்மாவதி

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 400.00

Description

மிகச் சிறந்த பண்பாடடையும் நனிநாகரிகத்தையும் தன்னுள் கொண்டு
விளங்கிய சங்க காலத்தைத் தொடர்ந்து அமைந்த களப்பிரர் ஆட்சி, தமிழக
வரலாற்றின் இருண்ட காலமாக அறிஞர்களால் கருதப்பெற்றது. இக்களப்பிரர்
குறித்த பல்வேறு
ஆய்வுநூல்கள் சீனி மயிலை.சீனி வேங்கடசாமி.
மா.இராசமாணிக்கனார். கே. கே. பிள்ளை, பி. டி. சீனிவாச ஐயங்கார், சி. மீனாட்சி.
மு. அருணாசலம் போன்ற வரலாற்றாசிரியர்களாலும், திரு. நடன. காசிநாதன்,
இரா. நாகசாமி போன்ற தொல்லியல் ஆய்வாளர்களாலும் எழுதப்பெற்று
வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில், புதிதாக என்ன கூறிட இயலும் என்ற
நிலையில், அந்நூல்களிலிருந்து மாறுபட்டுப் ‘பூலாங்குறிச்சி’யில்
கண்டெடுக்கப்பெற்ற கல்வெட்டுகளின் அடிப்படையில் இந்த ஆயவினை
நூலாசிரியர் முனைவர் ஆ. பத்மாவதி மேற்கொண்டுள்ளார்.
தத்துவ அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாய தம் ஆய்விற்கு மேற்கொண்ட ஓர்
அணுகுமுறையினைப் போன்று இந்நூலாசிரியரும் களப்பிரர் ஆட்சியின் பல்லவர்
பாண்டியர்,ஆட்சியில் எடுக்கப்பெற்ற இறுதியில் தோன்றிய செப்பேடுகள் இவற்றின் துணைகொண்டு கல்வெட்டுகள், எழுதப்பெற்ற களப்பிரரது ஆட்சியின் வரலாற்றினை மீட்டெடுக்க முயன்றுள்ளார். களப்பிரரின் அரசியல் கொள்கை, ஆட்சித் திறம், பொருளாதாரம் மற்றும் பிற மன்னர்களோடு ஆராய்ந்து இந்நூலில்
உறவுநிலை ஆகியவற்றை கொண்டிருந்த வெளிப்படுத்தியுள்ளார்.

You may also like

Recently viewed