Description
மதிய உணவு இடைவேளை நேரம்.
- காமாட்சி, பெருமாளுடன் தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்...
- "பெருமாள், நல்லா சாப்பிடுறா... இனிமேல் நீ பட்டினி கிடக்கக் கூடாது. நல்லா படிக்கிற பிள்ளைங்க உடம்புலயும் தென்பு வேணும்டா. இல்லைன்னா உன் புத்திசாலித்தனம் ஊருக்குப் பயன்படாமலேயே போய்டும்... இனிமேல் தினமும் நானுனக்கு மதியச் சாப்பாடு எடுத்துட்டு வருவேன்."
- "ரொம்ப நன்றிடா காமாட்சி. இப்படி நான் மதியச் சாப்பாடு சாப்பிட்டுப் பல நாட்கள் ஆய்டுச்சிடா... " - என்ற பெருமாளின் கண்களில் கண்ணீர்.
- "கவலைப்படாம சாப்பிடுறா... உனக்கு நான் இருக்கேன்." என்று காமாட்சி சொல்லி முடித்த போது அங்கே பார்வதி பாட்டி தோன்றினாள்.
-அவளைப் பார்த்ததும் காமாட்சி அதிர்ந்தான் -
"பாட்டி நீ இங்கே எப்படி?"
- "எப்பவுமே நீ சாப்பாட்டுப் பிரியன் இல்லைனு எனக்குத் தெரியும்...ராசா, நீ சாப்பாடு கட்டித்தரச் சொல்றீன்னா ஏதோ காரணம் இருக்கும்னு நெனச்சேன்... அதான் கிளம்பி வந்தேன்...என் சந்தேகம் சரியாய்டுச்சி ..
இந்தப் பிள்ளைக்குத் தரணும்னு என்கிட்ட கேட்டிருக்கலாமேப்பா... இனிமேல் ரெண்டு பேருக்குமே நான் சாப்பாடு கட்டித் தரேன்." என்ற பார்வதி பாட்டி, கண் கலங்கியபடி இருவருக்கும் ஊட்டி விட்டாள்.
- தன் பிள்ளை குமாரசாமியின் இரக்க மனசு அப்படியே பெயரன் காமாட்சி ராஜனுக்கும் இருந்ததை எண்ணி அவள் மனசு பெருமிதம் கொண்டது.