Description
இந்த உலகம் இன்றல்ல, என்றுமே ஜெயித்தவர்களை மட்டுமே கொண்டாடும்; கொண்டாடியும் வருகிறது. ஆனால், ஜெயித்தவர்கள் எத்தனை முறை தோற்றார்கள் என்பதை மிக எளிதாக மறந்துவிடுகிறது. அதனை ஞாபகப்படுத்தும் தொகுப்பே இந்த நூல்
வானொலி, சிவில் சர்வீஸ், இசை, மருத்துவம், எழுத்து, ஓவியம், கல்வி, அரசியல், சினிமா, வானிலை, பட்டிமன்றம், உணவகம் என பல்வேறு துறைகளில் கோலோச்சிய, கோலோச்சிக் கொண்டிருக்கிற 20 ஆளுமைகளின் பேட்டிகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பத்திரிகையாளர் மோ.கணேசன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளிடம் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு இது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் கே.சந்துரு, அமுதா ஐ.ஏ.எஸ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வீணை காயத்ரி, வானிலை ஆய்வாளர் ரமணன், எழுத்தாளர் ராஜேஷ்குமார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனர் ரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 20 ஆளுமைகளின் வெற்றிக் கதைகள் இந்த நேர்காணல்கள் வழியாக பதிவாகியுள்ளன.