தில்லை கோவிந்தன்


Author: அ. மாதவையா

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 145.00

Description

மாதவையா எழுதிய தில்லைக் கோவிந்தன் என்ற நாவல், மேலைநாட்டு வாசகருக்காக ஆங்கிலத்தில் Thillai Govindan: A Posthumous Autobiography என்ற தலைப்பில் எழுதப்பெற்றது. 139 பக்கமுள்ள அந்த ஆங்கில நாவலின் (1903) முதல் பதிப்பை, அன்று சென்னையில் பிரபலமாக விளங்கிய ஸ்ரீநிவாச வரதாச்சாரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலேயர் நாட்டில் லண்டனில் பல ஆண்டுகள் கழித்தே அதன் (1916) மறுபதிப்புகூட Thillai Govindan: A Posthumous Autobiography என்ற பெயரிலேயே Thomas Fisher Unwin என்பவரின் லண்டன் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. அதனாலேயே, ஆங்கில இலக்கிய உலகத்தின் கவனத்தையும் இந்திய அளவில் அதிகமான பரவலையும் அந்நாவல் பெற்றது. மேலை வாசகருக்கு இந்த நாவலிலுள்ள அந்நிய தேச நாகரிகமும் கலாச்சாரமும் இந்திய இலக்கியக் கலையின் முன்னேற்ற நிலையும் குறித்தே ஆர்வமும் கவனமும் இருந்திருக்கும். எனவே அங்கும் இந்தியாவிலும் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒருசிலர் இந்த நாவலைப் பொருட்படுத்தி, பாராட்டி எழுதிய மதிப்புரைகளின் தன்மையை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் உருவாகி வரும் வாசகர்களுக்கு இந்த நாவல் எத்தன்மையில் வாசிக்க வாய்த்திருக்கும், எவ்விதச் சலனங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் ஊகிக்க முடிகிறது. அதுவரை இந்தியச் சமூகத்தின் தேசிய எழுச்சியையும் சமய மறுமலர்ச்சியையும் சமய நல்லிணக்கத்தையும் சமூகச் சீர்திருத்தங்களையும் பகுத்தறிவையும் பற்றிப் பேசிய ஆரம்பகட்டப் புனைகதை இலக்கியம், அப்பிரச்சாரங்களைக் கலைத்துவ வடிவிலும் அதை மீறியும்கூட முன்பே படைத்திருக்கலாம். ஆனால் மாதவையாவின் புனைகதைகள் பண்பாட்டு அரசியலின் அபாயகரமான விளிம்புகளில் சஞ்சரித்திருக்கின்றன என்பதும், எனவே பிரச்சார இலக்கியம் என்று முத்திரை குத்தப்பட்டும் சனாதனிகளால் மறைக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் விலக்கப்பட்டும் வந்திருக்கின்றன என்பதையும் அளந்தறிய முடியும். ஆனால், பிரச்சாரம்கூட இலக்கிய அந்தஸ்தை அடையும் என்பதற்கும் உலக இலக்கிய வெளியில் நிறைய உதாரணங்கள் உண்டு என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

You may also like

Recently viewed