Description
இதழ்களிலும், இணைய இதழ்களிலும் வெளியான கட்டுரைகள், அரங்குகளில் வாசித்த கட்டுரைகள் என வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. நூலாசிரியரின் தனிப்பட்ட அனுபவங்கள் அவற்றின் சாராம்சத்தினால் தமிழ் இலக்கியச் சூழலின் பிரிக்கமுடியாத அங்கமாக மாறுவதை இக்கட்டுரைகளில் காண முடிகிறது. அவை ஏறத்தாழ முப்பதாண்டுக்கால தமிழ்ச் சிறுபத்திரிகை வரலாற்றின் முக்கியமான பல புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில் அஜயன் பாலாவின் இந்த நூல் தவிர்க்கவியலாத ஓர் இலக்கிய ஆவணமாகிறது.