எல்லாம் மெய் - எனது வாழ்க்கைப் பயணம்


Author: டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 450.00

Description

டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன் எழுதிய வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் கொண்ட நூல்.
நூலை வாசிக்கும்போது, நூலாசிரியர் பத்திரிகையாளரா, எழுத்தாளரா, மருத்துவரா, அரசியல்வாதியா? இவர் எதில் முதன்மை வகிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. என்றாலும் எழுத்தும் பத்திரிகையும் இவரது நேசிப்புக்கு உரியவை என்று தெரிகிறது.
மருத்துவக் கல்லூரிகளில் பயின்றபோதே தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளிலும் எழுதி இருக்கிறார். "மாணவம்' இதழுக்கு உதவி ஆசிரியராக, ஓவியராகப் பணி புரிந்திருக்கிறார். அரசியலைப் பொருத்தவரை, திருத்தணி வடக்கு எல்லை மீட்புப் போராட்டத்தில் புலவர் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் ஆகியோருடன் இணைந்து இவரது குடும்பமும் தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறது.
சித்தப்பா இ.எஸ். தியாகராஜன் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததையும், புலவர் மங்கலங் கிழாருக்கு விழா எடுத்ததையும் விவரமாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் இயக்கத்துடன் இருந்த நெருக்கத்தால், மூப்பனார், வாசன், சோனியாகாந்தி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டதை விவரித்துள்ள நூலாசிரியர், ராஜீவ்காந்தி குறித்த மறக்க முடியாத சம்பவங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
1996 மற்றும் 2006 - ஆம் ஆண்டு தேர்தல்களில் பள்ளிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதையும், தொகுதிக்கு செய்த நன்மைகளையும் பதிவிட்டிருக்கிறார்.
மருத்துவராக இவர் எழுதிய "நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை முறைகள்' தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவ நூலாகத் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆர். கையால் விருது பெற்றதையும், சட்டமன்ற உறுப்பினராக, அரசியல்வாதியாக முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இவர்களுடனான தொடர்பையும் குறிப்பிட்டுள்ளார். சட்டப் பேரவையின் ஆவணங்களில் இருப்பதை விட, கூடுதலான தகவல்களும், நிகழ்வுகளும்பதிவு செய்யப்பட்டு -ஆவணமாகும் தகுதி கொண்டது இந்நூல்.

You may also like

Recently viewed