Description
குழந்தைகளின் எளிய குதூகலமான சிறகடிப்புகளில் வசப்படுகிற அபூர்வமும் சிடுக்குகளின் சுமைகளற்ற எளிமையும் கூடிய கதைகள். இவற்றின் இசைமையில் அகப்பட்டிருப்பது உண்மையின் பேரெழுச்சி. அறிவின் திரைகளில் அகப்பட மறுக்கும் வண்ணப் பொலிவுகளெல்லாம் குழந்தமை விழிகளில் குவிந்து பிரகாசிக்கின்றன.
மின்னலைகள் அடியோடிச் செல்லும் நதியோட்ட நடை. ஆரவாரமற்ற தொனி. குழந்தை மனங்களின் ஸ்பரிசங்களில் விரியும் புனைவுலகம்.
பா.வெங்கடேசனின் கவித்துவ மனம் புனைந்த 17 கதைகள் அடங்கிய தொகுப்பு