Description
ஃபலஸ்தீனம்... உலகில் உள்ள அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த தேசம். இஸ்ரேலின் அடக்குமுறைகளை எதிர்த்து அம்மக்கள் நடத்தி வரும் போராட்டங்களை உலகம் வியப்புடன் பார்த்து வருகிறது. முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவை தன்னகத்தே கொண்ட பூமி. முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று மூன்று முக்கிய மதத்தினரின் புனித இடமான ஜெரூஸலம் அமைந்திருப்பதும் இங்குதான்.
நிம்மதியாக வாழ்ந்து வந்த மக்களின் நிம்மதியை குலைத்தனர் சியோனிசவாதிகள். ஃபலஸ்தீனில் நித்தமும் போராட்ட களம்தான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அங்கு போராளிகளே. உலகில் அதிகமான தியாகிகளை ஈன்றெடுத்த பூமி அதுவாகத்தான் இருக்க முடியும்.
ஃபலஸ்தீன பூமியில் அனைவரும் ஹீரோக்கள்தான் என்றாலும் அந்த ஹீரோக்களை வழிநடத்தும் தலைவர்கள் சிறப்புக்குரிய இடத்தைப் பெறுபவர்கள். இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம், ஹாஜி அமீன் அல் ஹுஸைனி என்று தொடங்கிய அந்த பட்டியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களில் பலரை இஸ்ரேல் குறிவைத்து கொடூரமாக கொலை செய்தது. ஆனால் பிரமிக்க வைக்கும் வகையில் புதிய முகங்கள் அங்கு தோன்றிய வண்ணம் உள்ளன. அம்மக்களை வழி நடத்தும் இயக்கங்களில் ஹமாஸ் முக்கிய இடத்தை பிடிக்கிறது. போராட்டம், அரசியல் என்று இரண்டையும் ஒரு சேர நடத்தி இயக்கங்களுக்கு நல்லதொரு முன் மாதிரியாக திகழ்கிறது.
அந்த வகையில் ஹமாஸ் இயக்க தலைவர் காலித் மிஷ்யலின் வாழ்க்கையுடன் அந்த இயக்கத்தின் வரலாறும் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலித் மிஷல் குறித்து தமிழில் வெளிவந்த முதல் புத்தகம் இது.