தமிழரைத் தேடி - இந்தியாவின் மூலப்பண்பாடு தமிழே


Author: த. தங்கவேல்

Pages: 326

Year: 2022

Price:
Sale priceRs. 250.00

Description

மீண்டும் ஆரியரைத் தேடி…” நூல் ஆசிரியர் பொறியாளர் தங்கவேல் எழுதிய “தமிழரைத் தேடி…”, முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் சிந்துவெளி பண்பாட்டின் அழிவிற்குப் பின் இந்திய வரலாற்றை வழி நடத்தியவர் தமிழரே என மிகத் தெளிவாக, தொல்லியல், மொழியியல், பண்பாட்டு மானிடவியல் சான்றுகளுடன் நிறுவுகிறது.

தமிழர் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தென்பாண்டி பகுதியிலிருந்து நேரடியாக கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளனர்.

முதல் நூல் ஆரியரின் மூலத்தை தேடியவர், இதில் தமிழரின் ஆதி மூலத்தை தேடுகிறார். மிக முக்கியமாக இந்நூல் தொல்லியல், மொழியியல், மானுடவியல், மரபணுவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பொதுவாக தமிழரின் வரலாறுகள் யூகங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட சுழலில் உண்மையான அறிவியல் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

தமிழரின் தோற்றுவாய் எங்கே ஆரம்பிக்கப்பட்டது?? தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட மூத்த மொழியா? ஆரியருக்கும் தமிழருக்கும் உள்ள மரபணு வேற்றுமையில் ஒற்றுமை, சடங்குகளின் வரலாறு, மொழியில் பின்புலத்தில் ஆராய்ச்சி, இலக்கியச் சான்று, கருப்பு சிவப்பு பண்பாடு, பெருங்கற்கால பண்பாட்டு போர்க்குடிகள், இரும்பைதேடிய வணிக குழுக்கள், மத்திய தரைக்கடல் நாடுகளுடன் வாணிகம், மினோயன் நாகரிகத்தின் தொடர்புகள், ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகளுக்கு பின் உள்ள வரலாறுகள் என பத்தாயிரம் வருட வரலாற்றை தரவுகளுடன் நூல் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.

தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய காரணத்திற்குரிய காரணக் கண்ணி இப்புத்தகத்தில் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியப் பண்பாடு தமிழ்ப் பண்பாட்டின் மூலமே கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது என்று அழுத்தமாக பல தகவல்களிம் மூலம் சொல்லுகிறார்.

You may also like

Recently viewed