Description
கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச்சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பான், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்தமான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தையெல்லாம் தன்னுடைய பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் கொடுத்து வந்தார். இது சாகுவிற்குத் தெரியவந்தது. எனவே சாகு 1903ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சங்கர மடத்தின் சொத்துக்களை அரசுடைமையாக்கினார். 1903ஆம் ஆண்டு மே மாதத்தில் சங்கராச்சாரியின் பதவியைப் பிடுங்கி, சங்கராச்சாரிக்கு இருந்த மத அதிகாரத்தையும் அறவே நீக்கி அவரை ஒரு சாதாரண மனிதராக்கினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சங்கராச்சாரி எங்கெங்கோ சுற்றி அலைந்து ஆதரவு திரட்டியும் பலன் இல்லாமல் 2.5 ஆண்டுகள் கழித்து வந்து சாகுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.