கருப்பும் நீலமும்


Author: இக்லாஸ் உசேன், சாரதா தேவி, குண. சந்திரசேகர்

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 150.00

Description

எங்களைப் பொறுத்த வரையில் கருப்பும் நீலமும் வெவ்வேறு வண்ணங்களின் பெயராக இருக்கலாம்; பெரியார், அம்பேத்கர் என்பன தனி நபர்களின் பெயராக இருக்கலாம்; ஆனால் அவற்றின் பின் இயங்கும் தத்துவமும் இலட்சியமும் ஒன்றுதான். அது தான் 'பிறவி இழிவு நீக்கம்'. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் பிறவியிலேயே ஒருவன் / ஒருவள் மற்றொருவருக்கு கீழே என விதித்து, எந்தச் சூழலிலும், என்ன முயன்றாலும் அச்சமூக அடுக்கினில் அவன்/அவள் மேலே ஏற முடியாது - அதுவே இறைவனின் கட்டளை என்ற கொடுமையான நிரந்தர ஏற்றத்தாழ்வை திணிக்கும் சாதிய முறையைத் தகர்த்தெறிவதே இவ்விரு எண்ணங்களின் முதன்மை லட்சியம். சாதி ஒழிந்த சமத்துவ சமூகத்தை விரும்பும் எவராலும் பிரித்து பார்க்கமுடியாத, பேராளுமைகள் பெரியாரும் அம்பேத்கரும் . நமது கொள்கை வழிகாட்டிகளாக தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து ‘வெங்காயம் மின்னிதழில்’ வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான ‘கருப்பும் நீலமும்’ என்ற நூல் கருஞ்சட்டை பதிப்பகம் மூலம் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

You may also like

Recently viewed